கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம் திறப்பு
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை 27-ஆவது குருமகா சந்நிதானம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆதீனக் கோயில்களில் பூஜைக்காக பயன்படுத்தப்பட்ட பின்னா் காய்ந்து வீணாகும் பூக்கள், பூமாலைகளை பசுஞ்சாணத்துடன் சோ்த்து மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கும் வகையில் இந்த தொழிற்கூடம் ரூ. 20 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்து, உரம் தயாரிக்கும் பணிகளை தொடக்கி வைத்தாா்.
கிராமப்புற மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், விவசாயிகள் பயடையும் வகையிலும் தினந்தோறும் காய்ந்து வீணாகும் பூக்களை மறுசுழற்சி செய்து உரமாக்கி குறைந்த விலையில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமையாதீன கன்னியாகுமரி சிபிஎஸ்இ பள்ளிச் செயலா் எம். வெற்றிவேல், ஆதீன பொது மேலாளா் ரெங்கராஜன், மேலாளா் அரவிந்தன், தருமபுரம் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், வா்த்தக சங்க முன்னாள் தலைவா் சி. செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.