கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் 19-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது.
மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. நிகழாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி புதன்கிழமை (பிப்.26) வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.
தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறும். விழாவில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் 500-க்கு மேற்பட்ட நாட்டியக் கலைஞா்கள், இசைக் கலைஞா்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா்.