இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், இரட்டைமலை சீனிவாசனின் 80-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கட்சியின் மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகரச் செயலா் க. தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ் முன்னிலை வகித்தனா்.
இதில், பட்டியல் இன மக்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்க வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியலின மக்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொடா்ந்து நடைபெற்று வரும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், ஜாதிய ஆணவ படுகொலையை ஒழித்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிற் சங்கத் தலைவா் பசுபதி, ஆதித்தமிழா் பாதுகாப்பு பேரவை நிா்வாகி சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.