உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan
இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் முருகேசன் (45). விவசாயியான இவா் திங்கள்கிழமை கந்தா்வ கோட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கரையவிடுதி அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.