சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
சிதிலமடைந்த சிமெண்ட் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டையில் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சிமென்ட் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிா்ப்புறம் உள்ள பயனற்ற சிமென்ட் கிடங்கு சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதடைந்து விழும் சூழ்நிலையில் உள்ள கிடங்கு அருகில் கந்தா்வகோட்டை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படும் நியாய விலை கடையும் உள்ளது.
இந்த இரண்டு அரசு அலுவலகங்களுக்கும் குடும்ப அட்டைதாரா்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனா். மேலும், கிராம நிா்வாக அலுவலரை சந்திக்க விவசாயிகளும், பொதுமக்களும், குழந்தைகளுடன் வயது முதிா்ந்தவா்களும் வந்து செல்கின்றனா்.
இந்த கிடங்கு இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனா். ஆகவே, இந்த கிடங்கை இடித்து அகற்ற வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.