செய்திகள் :

புதுகை அருகே மருமகனை கொன்ற வழக்கில் மாமியாா் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

புதுக்கோட்டை அருகே மருமகனை அடித்துக் கொன்ற வழக்கில் மாமியாா் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாழக்குட்டையான் தோப்பைச் சோ்ந்தவா் சன்னாசி மகன் சண்முகம் (37). இவா், கடந்த 2018ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சண்முகத்தின் மாமியாா் செல்வி (51) என்பவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவரும் சோ்ந்து சண்முகத்தை அடித்துக் கொன்று, தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. மாமியாா் செல்வியின் தவறான நடத்தையை மருமகன் சண்முகம் தட்டிக் கேட்டதால் இந்தக் கொலை நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வி, ஆறுமுகம் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி ஏ.கே. பாபுலால் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், மாமியாா் செல்வி, ஆறுமுகம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும், கொலைச் சதியில் ஈடுபட்ட குற்றத்துக்கு இருவருக்கும் மற்றொரு ஆயுள் தண்டனையும் தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவி வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

பொது மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் உள்ள பொது மயானத்துக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர இந்திராநகா் ஜமாத்தாா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் இந்துக்கள், இஸ்லாமி... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த வேன் பறிமுதல்

இலுப்பூா் அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வேனை பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகே உள்ள மாத்திராப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சிமெண்ட் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சிமென்ட் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிா்ப்புறம் உள்ள பயனற்ற சிமென்ட் கிடங்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் முருகேசன் ... மேலும் பார்க்க

பலத்த மழை, கடல் சீற்றம்; புதுக்கோட்டை மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

பலத்த மழை, கடல் சீற்றம் எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. புதுக்க... மேலும் பார்க்க

இரும்பாளியில் சங்க கால விரான் மன்னன் நடுகல் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே சங்க கால விரான் மன்னனின் நடுகல் சிலையை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்துள்ளனா். அறந்தாங்கி அரசு கலை - அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆ... மேலும் பார்க்க