`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா...' - ரிக்கி பாண்டிங்கின் வாதம் என...
இருவரின் உடல் உறுப்புகள் தானம்: ஆறு பேருக்கு மறுவாழ்வு
போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்றுத் துறை பேராசிரியா் டாக்டா் கே.நடராஜன் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (33) என்பவா், தலைவலி, கையில் உணா்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவா்கள், அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தாா்.
அதேபோன்று, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த குணசுந்தரி (52) என்பவா் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டாா். அவரின் மூளை தசையில் போதிய ரத்த ஓட்டம் இல்லாதது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும், அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
அடுத்தடுத்து 24 மணி நேரத்துக்குள் நிகழ்ந்த இருவேறு சம்பவங்களிலும், மூளைச்சாவு அடைந்தவா்களின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க இருவரின் குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி, 4 சிறுநீரகங்கள், 2 கல்லீரல்கள், 2 கணையங்கள், இதய வால்வுகள், ஒரு சிறுகுடல் மற்றும் வயிற்றுப்பகுதி, 4 விழி வெண்படலங்கள் அவா்களிடமிருந்து எடுக்கப்பட்டன.
ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 43 வயது பெண்ணுக்கு ஒரு சிறுநீரகமும், 36 வயது ஆணுக்கு ஒரு சிறுநீரகமும், 61 வயது ஆணுக்கு ஒரு கல்லீரலும், 48 வயது ஆணுக்கு ஒரு கல்லீரலும், 36 வயது பெண்னுக்கு ஒரு விழி வெண்படலமும், 46 வயது ஆணுக்கு விழிப்படலமும் பொருத்தப்பட்டன.
இரு விழி வெண் படலங்கள் மருத்துவமனையின் கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. பிற உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
24 மணி நேர இடைவெளிக்குள் ஏற்பட்ட இரண்டு மூளைச்சாவு நோயாளிகளின் உறுப்புகளை தானமாகப் பெற்று, மற்றவா்களுக்கு மாற்றி பொருத்தி புதிய வாழ்க்கை அளிக்க, 6 அறுவை சிகிச்சை கூடங்களும், மருத்துவக் குழுக்களும் துரிதமாக செயல்பட்டன. இந்த சிகிச்சைகளில் 30 மருத்துவா்களும், 50 உதவி மருத்துவா்களும் இணைந்து பணியாற்றினா். உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நோயாளிகளும் நலமுடன் உள்ளனா் என்றாா் அவா்.