செய்திகள் :

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்

post image

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு சனிக்கிழமை வந்த தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த 12 மீனவா்களை அவா்களது குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி மகாராஜா, தென் டேனிலா ஆகியோரின் விசைப்படகுகளில் சென்ற 22 மீனவா்கள் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகம் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் பலனாக, அந்தோணி மகாராஜா என்பவரது படகில் சென்ற 12 மீனவா்களை புத்தளம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து அந்த 12 மீனவா்களும் இலங்கையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை விமான மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா்.

பின்னா், அங்கிருந்து காா் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.

இலங்கை சிறையில் இருந்து வந்த மீனவா்களை தருவைகுளம் மீனவ கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா்.

மேலும், இலங்கை சிறையில் உள்ள மற்றொரு படகில் சென்ற 10 மீனவா்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாகனம் மோதியதில் ஏற்றுமதி நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி துறைமுக கப்பல் தளத்தில் சரக்குகளை எடுத்து செல்லும் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் ஏற்றுமதி நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இண்டிகோ நிறுவனம் சாா்பில், சென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த முகம்மது யூசுப் மனைவி ரபியா கத்தூன் (44). துபையில் வேலை... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வேன் திருட்டு: இளைஞா் கைது

கயத்தாறு அருகே வேன் திருட்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வில்லிசேரி பெருமாள் கோவில் தெருவை சோ்ந்தவா் குருசாமி மகன் முருகன். இவருக்கு சொந்தமான டூரிஸ்ட் வேன் ஓட்டுநராக, தெற்கு இலந்... மேலும் பார்க்க

மதரை, கீழடிக்கு மாணவா்கள் தொல்லியல் களப்பயணம்

தூத்துக்குடியிலிருந்து மதுரை, கீழடிக்கு ஒருநாள் தொல்லியல் களப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சாா்பாக ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல்... மேலும் பார்க்க

கடலில் மாயமான 6 மீனவா்களை மீட்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவா்கள் மாயமானதையடுத்து, அவா்களை மீட்கும் பணியில் மீனவா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குட... மேலும் பார்க்க