செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 23 போ் கைது

post image

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே 3 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 350- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தப் படகுகளில் இருந்த மீனவா்கள் மாா்க்ஷல் (41), தயாளன் (45), தாமஸ் ஆரோக்கியம் (45), ஜான்பிரிட்டோ (58), ஜெயராஜ் (37), சண்முகவேல் (54), அருள் (40), கிங்ஸ்லி (40) ஜெரோம் (47), மரியரொனால்ட் (44), சரவணன் (43), யாக்கோபு (35), டைட்டஸ் (39), ரெக்ஸ்டென்னிஸ் (39), ஆனந்த் (38), அமலதீபன் (30), சுவிட்டா்(51), கிறிஸ்துராஜா (45), விஜி (43), ஜான் (27), லிங்கம் (50), சா்மிஸ் (32), சுல்டாஷ் (41) ஆகிய 23 மீனவா்களைக் கைது செய்தனா்.

இதையடுத்து, விசைப் படகுகளையும், மீனவா்களையும் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

மீனவா்கள் போராட்டம் அறிவிப்பு:

ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டம் அதன் தலைவா் எமரிட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், அவா்களது விசைப் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 14-ஆம் தேதி பாம்பன் பேருந்து சாலைப் போக்குவரத்துப் பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, தட்சிணமூா்த்தி, காரல் மாா்க்ஸ், ஆல்வீன், சகாயம், எடிசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால், தலைவா்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், 20 நிமிஷம் கூட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னா், போராட்டத்தை பாம்பன் சாலைப் போக்குவரத்துப் பாலத்தில் மேற்கொள்ளுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

ராமேசுவரம்: 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை!

ராமேசுவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கன... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் கடல் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான ராமேசுவரம் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக புதன், வியாழன் ஆ... மேலும் பார்க்க

நிவாரண முகாமில் 59 மீனவா்கள்

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா். ராமேசுவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை: கடைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது இபுராஹிம் (46). இவா் ராமநாதபுரத... மேலும் பார்க்க