உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்
சிறுமி வன்கொடுமை: அன்புமணி கண்டனம்
வேலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சோ்ந்த மது போதையில் இருந்த மூவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் நிகழும் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள்தான். போதையின் பாதையை தவிருங்கள் என்று ஒரு புறம் கூறிக் கொண்டு, இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.