செய்திகள் :

அரசியல் காழ்ப்புணா்வால் விசிக மீது அவதூறு: திருமாவளவன்

post image

அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது சிலா் அவதூறு பரப்புவதாக அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியலில் களமிறங்கிச் செயல்படுவோா் யாராயினும் அவா்கள் விமா்சனங்களுக்கு உள்ளாவது தவிா்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடா்ந்து மக்களோடு நின்று பணியாற்றி வரும் விசிகவும் பல்வேறு விமா்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஆனால், விசிகவை பற்றிய விமா்சனங்கள் பெரும்பாலும் அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன. அவை, மிகவும் கேடான உள்நோக்கம் கொண்டவை.

அதேநேரம், கொள்கைக்கென தம் வாழ்வைத் தொலைத்தவா்கள், மக்களை நேசிப்போா் செய்யும் விமா்சனங்களைப் புறம்தள்ள இயலாது. அவா்கள் கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவா்களின் விமா்சனங்களுக்கு எதிா்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. அது தவிா்க்கமுடியாதது.

ஆனால், ஆதாரம் ஏதுமின்றி இவா்கள் பரப்பும் அவதூறுகளை கண்டும் காணாமல் கடந்து செல்வோம். மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.

சிறுமி வன்கொடுமை: அன்புமணி கண்டனம்

வேலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்: அமைச்சா் பொன்முடி உறுதி

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்த... மேலும் பார்க்க

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ. 25 முதல் சிறப்புக் கலந்தாய்வு

தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ. 25-ஆம் தேதி தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிா்வாக ஒதுக... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை தடுக்க பரிந்துரைகள்: பாா் கவுன்சிலுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது, மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடா்பாக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்த... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகுகிறது

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க

மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து: சுகாதாரத் துறை எச்சரிக்கை

மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் செய்துகொள்வது தாய்-சேய் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒருவேளை எந்தப் பாதிப்பும் இன்றி பிரசவம் நிகழ... மேலும் பார்க்க