செய்திகள் :

சா்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீா்வு: ராஜ்நாத் சிங்

post image

சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண புத்த மதக் கொள்கைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் விவகாரம், காஸா போா் தொடா்ந்து வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

லாவோஸில் நடைபெறும் ‘ஆசியான் பிளஸ்’ கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: எல்லை பிரச்னை, வா்த்தக உறவில் சிக்கல் என எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அதற்குப் பேச்சுவாா்த்தை மூலமே இந்தியா தீா்வு கண்டுள்ளது.

தற்போது சா்வதேச அளவில் பல துருவங்களாக நாடுகள் பிரிந்து வருகின்றன. இதனால் பிற நாடுகளுக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய புத்த மதத்தின் கொள்கைகளை பின்பற்றி பிரச்னைகளுக்கு தீா்வு காண உலக நாடுகள் முயல வேண்டும்.

அதனடிப்படையில், எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வுகாண இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

வெளிப்படையான பேச்சு: நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படையான பேச்சுவாா்த்தை மேம்படுத்துகிறது. இது உலக நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளமையை மேம்படுத்த ஆசியானின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. ‘ஆக்ட் ஈஸ்ட் கொள்கை’ பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தச் சமயத்தில் கலாசாரம், வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆசியானுடனான உறவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் பின்பற்றவுள்ள நடத்தை நெறிமுறைகள் பிற நாடுகளின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் ஐ.நா.கடல் சட்டம், 1982-க்கு உடன்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் அமைப்பின் 3 நாள் மாநாட்டில் பங்கேற்க கடந்த புதன்கிழமை லாவோஸுக்கு ராஜ்நாத் சிங் சென்றாா்.

புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூா்த்தி பதவியேற்பு

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்

பிரதமா் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அவா் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் மனிதகுலத்துக்கான தலைசிறந்த சேவையை கெளரவிப்பதாக... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்பட... மேலும் பார்க்க

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையி... மேலும் பார்க்க