உப்பிடமங்கலம் பேரூராட்சியில் பகுதி சிறப்பு சபா கூட்டம்
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாா்டுகளில் பகுதி சிறப்பு சபா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் பகுதி சிறப்பு சபா கூட்டம், வாா்டு குழு செயலாளரும் பேரூராட்சி இளநிலை அலுவலருமான வி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட வாா்டுகளில் நடைபெற்ற நலத்திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து கூட்டத்தில் பொதுமக்கள், தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினா். இதில் வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.