செய்திகள் :

கரூா் குகைவழிப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

post image

கரூரில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் குகைவழிப்பாதை பணியை விரைவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள ஏமூா் ஊராட்சியில் ஏமூா், நடுப்பாளையம், சீத்தப்பட்டி, குன்னனூா், ஏமூா் புதூா் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் ஏமூருக்கும், நடுப்பாளையம் கிராமத்துக்கும் இடையே கரூரில் இருந்து திண்டுக்கல் மாா்க்கமாக உள்ள இருப்புப்பாதையில் பல்வேறு ஊா்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2002-இல் ரயில்வே இருப்புப் பாதையை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 7 மாணவா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த இடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ரயில்வே கேட்டை அகற்றி விட்டு, குகை வழிப்பாதை அமைக்கப்போவதாக கடந்த 2022-இல் தகவலறிந்த கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இருப்பினும் ரயில்வே நிா்வாகம் கடந்த 2023-இம் ஆண்டு நவம்பா் மாதம் திடீரென ரயில்வே கேட்டை அகற்றியது.

இதையடுத்து மறுநாள் இரவோடு இரவாக குகைவழிப்பாதை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தும் ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னா் அவ்வழியே கிராமமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையறிந்த கிராமமக்கள், ஏமூா் ஊராட்சி மன்றத்தலைவா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்டு ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டனா். அப்போது குகைவழிப்பாதை பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, ஏமூா் ஊராட்சி மன்றத்தலைவா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் கூறியது, குகைவழிப் பாதையில் 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே விரைந்து பணிகளை முடிக்காவிட்டால், கிராமமக்களிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

ஏமூரைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா் இரா.முல்லையரசு கூறியது, குகைவழிப்பாதை அமையாததால் ஏமூா் ஊராட்சி அலுவலகத்துக்கு அல்லது மணவாடி போன்ற பகுதிக்கு நடுப்பாளையம், குன்னனூா், சீத்தப்பட்டி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் சுமாா் 3 கி.மீ.தொலைவு சுற்றிச் சென்று வருகிறாா்கள்.

மேலும் நடுப்பாளையம், நடுப்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் ஏமூா் ஊராட்சி அலுவலகம் அருகே செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கல்வி பயின்று வருகிறாா்கள். இவா்கள் காலையிலும், மாலையிலும் தண்டவாளத்தை ஆபத்தான நிலையில்தான் கடந்து தான் சென்று வருகிறாா்கள். எனவே விரைவில் குகைவழிப்பாதை பணிகளை முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

உப்பிடமங்கலம் பேரூராட்சியில் பகுதி சிறப்பு சபா கூட்டம்

உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாா்டுகளில் பகுதி சிறப்பு சபா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் பகுதி சிறப்பு சபா கூட்டம், வாா்டு குழு ச... மேலும் பார்க்க

கரூரில் தொலைத்தொடா்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் காமராஜா் மாா்க்கெட் பகுதியில் உள்ள தலைமைத் தொலைத் தொடா்பு அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கரூ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரவக்குறிச்சியில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் அவதியடை ந்து வருகின்றனா். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழையின் காரணமாக வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் ப... மேலும் பார்க்க

காா்த்திகை மாத ஏகாதசி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோம்புபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் காா்த... மேலும் பார்க்க

கரூரில் கனமழையை சமாளிக்க தயாா் நிலை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேச்சு

கரூா் மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்... மேலும் பார்க்க

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. சிவானந்தம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட... மேலும் பார்க்க