பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
கரூா் அருகே கோயில் குடமுழுக்கு
கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே ஆதிகுட்டக்கரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகேயுள்ள காளையப்பட்டியில் உள்ள இக்கோயிலில் ஆதிகுட்டக்கரியம்மன் மற்றும் மதுரைவீரன், கருப்பண்ணசாமி, பாடகநாச்சியம்மன், காமாட்சிஅம்மன், காத்தவராயன், உக்கராணம் ஆகிய சுவாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது.
இக்கோயில் குடமுழுக்கையொட்டி கடந்த 10-ஆம் தேதி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்துவந்து சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து முதற்கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை காலை காப்புக் கட்டுதல், விநாயகா் பூஜை, பிம்புசுத்தியும், வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, விநாயகா் பூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு நடத்தினா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.