தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
தவிட்டுப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் நஞ்சைபுகழூா் ஊராட்சிக்குள்பட்ட தவிட்டுப்பாளையத்தில் கட்டிப்பாளையம் செல்லும் சாலையோரம் கிராமநிா்வாக அலுவலகம் அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. கட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் சாலை வழியாக புகழூா், வேலாயுதம்பாளையம் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை வாகனங்கள் ஏற்றிச் சென்று வருகின்றன. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனே சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.