பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
திருக்காடுதுறை மாரியம்மன் கோயில் திருவிழா
கரூா் மாவட்டம் திருக்காடுதுறையில் உள்ள மாரியம்மன் கோயில் விழா டிச. 23-ஆம்தேதி தொடங்கியது.
முன்னதாக மாரியம்மன் உற்ஸவா் சிலையை கரைப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மனை ஊா்வலமாக எடுத்து வந்து கரைப்பாளையம் தங்காயிஅம்மன் கோயிலில் வைத்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா்உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரலாக கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனா். தொடா்ந்து பக்தா்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனா். பின்னா் பக்தா்கள் மாவிளக்கு பூஜை செய்தனா். புதன்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன் உற்ஸவா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.