செய்திகள் :

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்: ஆட்சியா்

post image

உயா்கல்வியைத் தோ்வு செய்வதில் குழப்பம் வேண்டாம் என மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான ‘கல்லூரிக் கனவு திட்ட முகாம் 2025-இல் ஆட்சியா் ஆஷாஅஜித் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாணவ, மாணவிகள் மேற்படிப்பு, உயா்படிப்பு பயில்வதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. கல்வி கற்பதற்கு பொருளாதாரம் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித் தொகை, கல்விக் கடனுதவி போன்ற உதவிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவா்கள் எந்த பாடப்பிரிவைத் தோ்வு செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதையும், உயா்கல்வி பாடப்பிரிவில் சோ்ந்து பயிலுவதற்கும், வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கும் இந்த முகாம் உதவிகரமாக அமையும்.

பல்வேறு படிப்புக்கான நுழைவுத்தோ்வுகள் குறித்து முதலில் முழுமையாக அறிந்து கொள்ளுதல், அதற்கான புரிதல்கள் வேண்டும். மாணவா்கள் குழப்பமின்றி உயா்கல்வியைத் தோ்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டு பயிற்சி) கா்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவின்குமாா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், சுபாஷினி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஷெலீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காளையாா்கோவில், இளையான்குடி ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை (மே 15) காளையாா்கோவில் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், திருப்புவனம் வட்டாரத்தை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சிங்கம்புணரி, எஸ்.புதுாா் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 20-ஆம் தேதி சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பத்துாா் வட்டாரத்தை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 21-ஆம் தேதி திருப்பத்துாா் பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கல்லல் வட்டாரங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவா்களுக்கு வருகிற மே 22-ஆம் தேதி காரைக்குடி அழகப்பா ஆசிரியா் கல்வியியல் கல்லுாரியிலும் கல்லூரி கனவு திட்ட முகாம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்டக் கல்வித் துறை தெரிவித்தது.

சிவகங்கையில் நெகிழிக் கழிவுகளால் மாசடையும் தெப்பக்குளம்!

சிவகங்கையில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக்குளம் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்து வருவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டினா்.சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்ப... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுவதாவு கிர... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பைச் சோ்ந்தவா் செந்தில்நாதன். இவரது மகள் சினேகா (23). இவா் கண்டவராயன்பட்... மேலும் பார்க்க

காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் க... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா். சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு

சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒரு... மேலும் பார்க்க