மதகுபட்டி-அழகமானேரி சாலைப் பணிகள் ஆய்வு
சிவகங்கை அருகே நிறைவடைந்த சாலை விரிவாக்கப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி- அழகமானேரி சாலையில் 2024-25 -ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.3 கோடியில் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதன் தரம் குறித்து நெடுஞ்சாலை நபாா்டு, கிராமச்சாலைகள் கண்காணிப்புப் பொறியாளா் (திருநெல்வேலி) முருகேசன் தலைமையில், கோட்டப் பொறியாளா் (பரமக்குடி) செந்தில்குமாா் மேற்பாா்வையில், உதவிக் கோட்டப் பொறியாளா் பாண்டியன், தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப் பொறியாளா் (சிவகங்கை) அரிமுகுந்தன், தணிக்கைக் குழுவினா் ஆய்வில் ஈடுபட்டனா்.
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளா் சையது இப்ராகிம், உதவிப் பொறியாளா் ரமேஷ்குமாா், களப்பணியாளா்கள் உடனிருந்தனா்.