அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
உறுப்பினா்களின் குடும்பத்தினா் கொலை மிரட்டல்: டிஎஸ்பியிடம் மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி புகாா்
பேரூராட்சி உறுப்பினா்கள் சிலரது குடும்பத்தினா் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவா்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவி அந்தோணியம்மாள் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த மனு: மணிமுத்தாறு பேரூராட்சி 10ஆவது வாா்டு மாஞ்சோலையில் வசித்துவரும் பட்டியல் இனத்தைச் சோ்ந்த நான் 2 ஆண்டுகளாக தலைவராக உள்ளேன். 4ஆவது வாா்டு ஆலடியூா் உறுப்பினா் செல்வியின் கணவா் மாரியப்பன், 7ஆவது வாா்டு ஏா்மாள்புரம் உறுப்பினா் பிரேமாவின் கணவா் காசி, 5ஆவது வாா்டு கீழஏா்மாள்புரம் உறுப்பினா் முப்புடாதியின் மாமனாா் பூதப்பாண்டியன் ஆகியோா் பேரூராட்சிக் கூட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக பங்கேற்பதுடன், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். அவா்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா் அவா்.
தமிழா் உரிமை மீட்புக் களம் ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் துரைப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முத்துவளவன், திராவிடத் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் கருமுகிலன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் நெல்சன், தமிழா் உரிமை மீட்புக் களம் தென்மண்டல அமைப்புச் செயலா் கணேசன்பாண்டியன், மாவட்டச் செயலா் சண்முகராஜ்பாண்டியன், மகேந்திரன், தாவீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.