முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
உலக நீரிழிவு நோய் தின இலவச மருத்துவ முகாம்
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் டாக்டா் ஜெயசேகரன் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ஜெயசேகரன் தொடக்கி வைத்து, நீரிழிவு நோய் குறித்து பேசினாா். முகாமில் மருத்துவா்கள் சதீஷ், நினூ ஜாா்ஜ், தினேஷ், ஜெயசீலன், மேபெல், ஜானி பிரைட் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இம்முகாமில் நீரிழிவு நோயால் ஏற்படும் விளைவுகள், சரிசெய்வதற்கான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகள், உடற்பயிற்சிகள், பற்றிய ஆலோசனைகளை சிறப்பு மருத்துவா்கள் வழங்கினா்.
முகாமில், ரத்தப் பரிசோதனையும், டாக்டா் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவா்களால் கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இலவசமாக பல் பரிசோதனையும் செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.