Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
கடமலைகுன்று சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
கடமலைக்குன்று பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கண்ணணூா் ஊராட்சி காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, குமரி மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால் சிங், விலவூா் பேரூராட்சித் தலைவா் ஜே.சி. பில்கான், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனு குமாா் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளா் கா. பாா்த்தீபன், ஆய்வளாளா் கிறிஸ்டி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளா் ரகுகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலை உடனடியாக சீரமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்துஇரவு வரை நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.