ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
`உலகின் மூத்த முடி திருத்தும் கலைஞர்' - கின்னஸ் சாதனை படைத்த 108 வயது மூதாட்டி... யார் இவர்?
உலகின் வயதான பெண் முடி திருத்தும் கலைஞராக 108 வயது ஜப்பானிய மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பான் டோச்சிகி மாகாணத்தின் நககாவா நகரில் உள்ள தனது சலூனில் தொடர்ந்து பணியாற்றவும் அவர் விரும்புகிறார்.
ஷிட்சுய் ஹகோய்ஷியை என்பவர் தனது 14 வயதிலேயே டோக்கியோவிற்கு தனியாக குடிப்பெயர்ந்திருக்கிறார். அதன் பின்னர் ஒரு பயிற்சி முடி திருத்துபவராக வேலை செய்ய தொடங்கினார். தனது திறமையை மேலும் மெருகேற்ற இரவிலும் பயிற்சி செய்திருக்கிறார். 1936 ஆம் ஆண்டில் 20 வயதுக்கு முன்னரே அவர் முடி திருத்தும் உரிமையை பெற்றிருக்கிறார்.

அந்த உரிமை பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் ஜிரோவுடன் சேர்ந்து சொந்த சலூனை திறந்தார் ஷிட்சுய். இதற்கிடையில் இந்த சலூன் ஒரு விமான தாக்குதலின் போது முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அவர் நககாவாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் இம்பீரியல் ஜப்பானிய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட அவரது கணவர் போரிலிருந்து திரும்பவே இல்லை. 1953 வரை அவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருக்கு கிடைக்கவே இல்லையாம். தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்காக நககாவாவில் ஒரு முடிதிருத்தும் கடையைத் திறந்தார். அதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் ஷிட்சுய்.
`70 வயதில் தொடங்கிய தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கமே எனது நீண்ட ஆயுளுக்குக் காரணம்' என்று கூறும் இவர், தனது அயராத உழைப்பால் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஷிட்சுய் தனது 108 வயதில் உலகின் வயதான பெண் முடி திருத்தும் கலைஞராக கின்னஸ் சாதனை பெற்று பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
