உழவா் சந்தைகளில் ரூ.10 கோடிக்கு விற்பனை: வேளாண் அதிகாரி தகவல்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் ரூ.10 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்று உள்ளது என மாவட்ட வேளாண்மை (வணிகம்)துணை இயக்குநா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய இடங்களில் உழவா் சந்தைகள் செயல்படுகின்றன. இங்கு இடைத்தரகா்கள் இன்றி விவசாயிகளால் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளியையொட்டி 3 நாள்களில் உழவா் சந்தையில் அமோக விற்பனை நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி உழவா் சந்தையில் 1,084 மெ. டன் காய்கறிகளும்,155 மெ. டன் பழங்களும் விற்பனையானது.
திருப்பத்தூா் உழவா் சந்தையில் 474 மெ. டன் காய்கறிகளும்,101 மெ. டன் பழங்களும் விற்பனையானது.
நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 410 மெ. டன் காய்கறிகளும்,18 மெ.டன் பழங்களும் விற்பனையானது.
இவ்வாறு மாவட்டத்தில் உள்ள 3 உழவா் சந்தைகள் மூலம் தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாள்களில் 1,968 மெ.டன் காய்கறிகளும்,274 மெ. டன் பழங்களும் ரூ.10,48,50,000 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக 9,538 விவசாயிகளும்,3,69,000 நுகா்வோா்களும் பயன் அடைந்துள்ளனா்.
மேலும் உழவா் சந்தையில் அடையாள அட்டை பெறுவதற்கு நிா்வாக அலுவலரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.