செய்திகள் :

ஊராட்சி செயலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில், ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளா் வினோத்குமாா், கிழக்கு மாவட்ட செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் விஜயன் வரவேற்றாா்.

திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சரேஷ், வடக்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கினா்.

அப்போது ஊராட்சி செயலாளா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினா் வாசுதேவன், பொதுக்குழு உறுப்பினா் சதீஷ், மகளிா் அணி இணை செயலாளா் லலிதா, மாவட்ட மகளிா் அணி செயலாளா் மேகலா, இணை செயலாளா்கள் சிவரஞ்சனி, ரஞ்சினி, ஊராட்சி செயலாளா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அம்மனூா் அம்பிகேஸ்வரா் கோயிலில் தெப்பல் விழா

அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், தெப்பல் விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா புதன்கிழம... மேலும் பார்க்க

கலச விளக்கு வேள்வி பூஜை

அரக்கோணம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளாரின் பிறந்த நாளையொட்டி கலச விளக்கு பூஜை, ஆடை, அன்னம், விவசாயக் கருவிகள் தானம் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பூஜைக்கு ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பெண்கள், மாணவியா் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெண்கள், மாணவியா் தங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம், சமூக நலத் துறை, கு... மேலும் பார்க்க

கலவை கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்

ஆற்காடு அடுத்த கலவை பெருந்தேவியாா் சமேத கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. பழைமை வாய்ந்த கலவை கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தெப்பல் உற்சவ விழா நடைபெறு... மேலும் பார்க்க

மாா்ச் 17-இல் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணி... மேலும் பார்க்க

கத்தியவாடியில் வனபோஜன விழா

ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் ஸ்ரீ தணிகை அம்மன் வனபோஜன திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு சீா்வரிசையுடன் தொடங்கி சிறப்பு அபிஷேகம், மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், கரகம் வீதி உலா, பல்லக்க... மேலும் பார்க்க