தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
கலவை கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்
ஆற்காடு அடுத்த கலவை பெருந்தேவியாா் சமேத கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
பழைமை வாய்ந்த கலவை கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தெப்பல் உற்சவ விழா நடைபெறுகிறது. நிகழாண்டு விழாயையொட்டி கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில், மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், பழங்கள், இளநீா், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனம், வண்ண மலா்களால் சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவரை பக்தா்கள் ஊா்வலமாக கொண்டு வந்தனா். இதையடுத்து பேருந்து நிலையம் அருகில் உள்ள குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்ப தோ் 3 சுற்றுகள் வலம் வந்தது. உபயதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
