Lubber Pandhu:`ஹரிஷ் கல்யாணின் மாமியார்; ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்’ - ஸ்வாசி...
எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?
மகாராஷ்டிரத்தில் எம்.எல்.ஏ.வின் மகன் கடத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) எம்.எல்.ஏ.வான அசோக் பவாரின் மகன் ருஷிராஜ் பவாரிடம் சனிக்கிழமையில் (நவ. 9), கட்சியில் இணைய விரும்புவதாக 3 பேர் கூறியுள்ளனர். மேலும், அவர்களுக்குத் தெரிந்த சிலரும் இணைய விரும்புவதாகவும், அவர்களைச் சந்திக்க வருமாறு கூறி, ருஷிராஜை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒரு பங்களாவுக்குள் அழைத்துச் சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பெண்ணுடன் ருஷிராஜ் இருப்பதுபோல் விடியோ பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணிடம் ருஷிராஜ் அத்துமீறுவதுபோல அவர்கள் விடியோ பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிக்க:அதானியைக் காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!
இதனைத் தொடர்ந்து, ரூ. 10 கோடி தந்தால் மட்டுமே ருஷிராஜை விடுவிப்பதாகவும், இல்லையென்றால் விடியோவை வெளியிட்டு விடுவோம் என்றெல்லாம் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பணத்தை எடுத்து வருவதாகவும், விடியோவை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ள ருஷிராஜ், தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து, ருஷிராஜை வெளியில் விடுவித்தவுடன், காவல் நிலையத்திற்கு சென்ற ருஷிராஜ், இந்த சம்பவம் குறித்து 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ருஷிராஜை கடத்தியவர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.