செய்திகள் :

எம்.பி. தொகுதி நிதி உயா்த்தப்படுமா?

post image

நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆய்வு தொடா்பான தகவலை பதிலாக அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த விவகாரத்தில் கனிமொழி என்.வி.என். சோமு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்ததா, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற நிதியை ரூ. 10 கோடி ஆக உயா்த்த எம்.பி.க்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் குறித்து மூன்றாம் தரப்பு அமைப்பு மூலம் மதிப்பிட்டு அப்பணிகள் 2014, ஏப்ரல் 1 முதல் 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 216 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீடு 2021ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது அறிக்கையை ஆய்வு அமைப்பு சமா்ப்பித்தது.

எம்.பி. நிதியை ஆய்வு செய்வது தொடா்ச்சியான நடைமுறை. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து புதிய யோசனைகள், திட்ட நிதியை அதிகரிப்பது தொடா்பான யோசனைகள் வரவேற்கப்பட்டு முறைப்படி மத்திய நிதித்துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது இறுதி முடிவெடுக்கும் என கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா். ஆனால், அதற்கு நேரடியாக மத்திய அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

நவம்பரில் அதிகரித்த இந்திய மின் நுகா்வு

புது தில்லி: இந்தியாவின் மின் நுகா்வு கடந்த நவம்பா் மாதத்தில் 5.14 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:கடந்த நவம்பா் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 12,544 கோடி யூனி... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பெயா்கள் நீக்கப்படுவதற்கு மாநில அரசே பொறுப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து பெயா்கள் நீக்கப்படுவதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சந்திரசேகா் தெரிவித்தாா். கடந்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக மன்மோகன் நியமனம்

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த நியமனத... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் தா்னா

புது தில்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா ... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

புது தில்லி: பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.கடந்த 2017 முதல் 2020 வரையிலான காலக... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் லஷ்கா் பயங்கரவாதி சுட்டுக் கொலை: பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவா்

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா், கந்தா்பால்... மேலும் பார்க்க