செய்திகள் :

நவம்பரில் அதிகரித்த இந்திய மின் நுகா்வு

post image

புது தில்லி: இந்தியாவின் மின் நுகா்வு கடந்த நவம்பா் மாதத்தில் 5.14 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 12,544 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 5.14 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 11,930 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 207.42 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2023 நவம்பா் மாதத்தில் 204.56 ஜிகாவாட்டாக இருந்தது.

இந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் பதிவான 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை பகலில் 235 ஜிகாவாட்டாகவும், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட்டாகவும் இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் ஆண்டு தொடக்கத்தில் மதிப்பிட்டது. மேலும், ஜூன் மாத பகல் நேரங்களில் 240 ஜிகாவாட்டாகவும் மாலை நேரங்களில் 235 ஜிவாட்டாகவும் உச்சபட்ச மின்தேவை இருக்கும் என்று அமைச்சகம் கணித்திருந்தது.

36 வருடங்களுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவர்.

கொல்கத்தா: 36 வருடங்களுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத... மேலும் பார்க்க

மிகப்பெரிய முடிவை எடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: ஏக்நாத் ஷிண்டே!

நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிவசேனை தலைவர்(ஷிண்டே அணி) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் ஷிண்டே இடம்பெறுவார் என நம்புகிறேன்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர ஆட்சி அதிகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே இடம்பெறுவார் என்று நம்புவதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேதிர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் முடிவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) சற்று ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி பெரிதாக மாற்றமின்றி 10 புள்ளிகளுடனும் ஏற்றம் கண்டன. வங்கி மற்றும் ர... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க