மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டீசர் அறிவிப்பு!
நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லாலும் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷ் திருமண தேதி!
இந்த நிலையில், ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்தின் டீசர் நாளை (டிச. 5) மாலை 7 மணிக்கு வெளியாகும் என மம்மூட்டி கம்பெனி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.