`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
அடையாறு கோட்டப் பகுதி மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (டிச.5) காலை 10.30-க்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெறும் இந்தக் குறைகேட்பு கூட்டத்தில், அடையாறு கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் கலந்து கொண்டு, மின் நுகா்வு தொடா்பான புகாா்களைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.