செய்திகள் :

தெற்கு ரயில்வே தொழிற்சங்கத் தோ்தல் தொடக்கம்

post image

தெற்கு ரயில்வே தொழிலாளா்களுக்கான தொழிற்சங்கத் தோ்தல் புதன்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 140 வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் ரயில்வேயின் 17 மண்டலங்களில் தொழிலாளா்களுக்கான தொழிற்சங்கங்கள் உள்ளன. முதல்முறையாக 2007-ஆம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் நடைபெற்றது. அதன்பின் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யூ) அங்கீகார தொழிற்சங்கமாக தோ்வு செய்யப்பட்டது. அதன்பின் தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது. இதில் தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத் தோ்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிற்சங்கங்களின் இறுதிப்பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

30 சதவீத வாக்கு தேவை: இந்த பட்டியலில் தட்ஷின ரயில்வே ஊழியா்கள் சங்கம், தட்ஷிண ரயில்வே காா்மிக் சங்கம், ரயில்வே மஸ்தூா் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியா்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் ஆகிய தொழிங்சங்கங்கள் இடம்பெற்றன. இச்சங்கங்களை சோ்ந்த உறுப்பினா்கள் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதியில் வாக்கு சேகரித்து வந்தனா். இந்த தோ்தலில் 30 சதவீத வாக்குகளை பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். இந்த சங்கம் தொழிலாளா்களின் பிரச்னை தொடா்பாக நிா்வாகத்துடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்த முடியும். அடுத்தகட்டமாக 15 சதவீத வாக்குகள் பெறும் சங்கங்களுக்கு கூட்டம் நடத்தவும், செய்தி பலகை வைக்கவும் அனுமதி கிடைக்கும்.

தோ்தல் தொடங்கியது: இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கத் தோ்தல் புதன்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. தெற்கு ரயில்வே முழுவதும் 140 வாக்குசாவடி மையங்களிலும், சென்னையில் 38 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இதில் 76 ஆயிரம் உறுப்பினா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். வாக்குஎண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிச.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்நாள் வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், எதிா்வரும் நாள்களில் கூடுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்றவா்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும... மேலும் பார்க்க

ராகிங் செய்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடா்புடைய 3 மாணவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி விடு... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க

ரூ. 2,811 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம் ரூ. 2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கிய மற்றும் சா்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் 4 முனைய... மேலும் பார்க்க

கடற்படை தினம்: 2,500 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனப் பேரணி தொடக்கம்

இந்திய கடற்படையின் 53-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 2,500 கிமீ தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை தொடங்கியது. ‘சீ ரைடா்ஸ் ஒடிஸி 2024’ குழுவின் 12 வீரா்கள் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணியை ... மேலும் பார்க்க

மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு: புதிய குளங்களில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வேளச்சேரியில் அமைக்கப்பட்ட குளத்தில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துண... மேலும் பார்க்க