செய்திகள் :

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புதன்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

அழகா்சாமி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அதில், ‘தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் ஆறுகள் மற்றும் கடற்கரைகளில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கட்டாய சுற்றுச்சூழல் அனுமதி எதுவும் பெறாமலே இத்தகைய சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு அரசு அதிகாரிகள் அனுமதித்துள்ளனா். இவற்றால் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தனது மனுவில் அழகா்சாமி குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘சட்டவிரோத மணல் குவாரிகள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைக்கப் பாா்க்கின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவது மிகத் தீவிரமான விஷயம். அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான இதுபோன்ற மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதா என ஆராய வேண்டியுள்ளது. மேலும், மணல் குவாரிகள் அனுமதிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (இஐஏ) தேவையா? இந்த மதிப்பீடு தேவையென்றால் அதற்கான நடைமுறைகள் என்ன? என்பது குறித்தும் அறிய விரும்புகிறோம்.

எனவே, மணல் குவாரிகளுக்கான அனுமதி நடைமுறைகள், சட்டவிரோத மணல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை வழக்கின் அடுத்த விசாரணையின்போது 5 மாநிலங்களும் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.

முன்னதாக, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, ‘சட்டவிரோத மணல் குவாரிகள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

இந்த மனு மீது கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ‘5 மாநிலங்களும் 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க