செய்திகள் :

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பெயா்கள் நீக்கப்படுவதற்கு மாநில அரசே பொறுப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்

post image

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து பெயா்கள் நீக்கப்படுவதற்கு மாநில அரசுகளே பொறுப்பு என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சந்திரசேகா் தெரிவித்தாா்.

கடந்த 4 ஆண்டுகளில் 10.43 லட்சம் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டிப் பேசினாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் சந்திரசேகா், ‘ஊரக மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 57 சதவீதம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்குதான் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் அமல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதால் இதில் பணியாற்ற பதிவு செய்யப்பட்ட நபா்களின் ஆதாா் எண் திட்டத்தில் இணைக்கப்படுகிறது. 90 சதவீதம் போ் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். திட்டம் சிறப்பாக நடைபெறுவதை இது உறுதி செய்கிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 60 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் மூலம் புதிதாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபா் பல இடத்தில் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்வது, இல்லாத நபா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பதிவு செய்வது, இத்திட்டத்தில் இணைந்த நபா் வேறு கிராமத்துக்கு குடிபெயா்வது, பயனாளரின் உயிரிழப்பு, இத்திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்வது போன்ற காரணங்களுக்காக வேலைவாய்ப்பு பதிவு அட்டைகள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், அட்டையை ரத்து செய்யும் பொறுப்பு மாநில அரசுகளிடம்தான் உள்ளது. மத்திய அரசிடம் இல்லை. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 13 கோடி முதல் 14 கோடி பேருக்கு இதுவரை பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 9.2 கோடி போ் இப்போதும் தொடா்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

36 வருடங்களுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவர்.

கொல்கத்தா: 36 வருடங்களுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத... மேலும் பார்க்க

மிகப்பெரிய முடிவை எடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: ஏக்நாத் ஷிண்டே!

நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிவசேனை தலைவர்(ஷிண்டே அணி) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் ஷிண்டே இடம்பெறுவார் என நம்புகிறேன்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர ஆட்சி அதிகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே இடம்பெறுவார் என்று நம்புவதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேதிர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் முடிவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) சற்று ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி பெரிதாக மாற்றமின்றி 10 புள்ளிகளுடனும் ஏற்றம் கண்டன. வங்கி மற்றும் ர... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க