செய்திகள் :

ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்ன ஆனது? மகன் விளக்கம்!

post image

நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் ஏ.ஆர். அமீன் விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று(மார்ச் 16) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல் நிலை குறித்து அவரது மகன் ஏ.ஆர். அமீன் சமூக வலைதளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”ரசிகர்கள், குடும்பத்தினர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பான பிரார்த்தனைக்கு நன்றி. என் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால், சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடைய அன்பான வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பும் நன்றியும்” என்று ஏ.ஆர். அமீன் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பரிசோதனைகள் நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனியார் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர் கைது!

உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலி... மேலும் பார்க்க

சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!

சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியாவை எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் பாராட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் நாக சைதன்யா - சோபிதா!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் கார் பந்தயப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட... மேலும் பார்க்க

விஷ்ணு விஷால்-ராம்குமார் கூட்டணி: படத் தலைப்பு அறிவிப்பு!

ராட்சசன் இயக்குநருடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார்.நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு இசை ஆல்பத்தை வெளியிடும் வில் ஸ்மித்!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது புதிய இசை ஆல்பத்தை அறிவித்துள்ளார்.56 வயதாகும் வில் ஸ்மித் 'பேஸ்ட் ஆன் எ ட்ரூ ஸ்டோரி' என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். ஆல்பத்திலுள்ள பாடல்கள். இந்தா ஆல்பம் வருகி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா!

புதுச்சேரி கடற்கரையில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, ... மேலும் பார்க்க