ஏஐடியுசி ஆலோசனைக் கூட்டம்
ஏஐடியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம், ஆயத்த மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பெ.அருணாசலம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் நா.பெரியசாமி, செயலா் ரா.மணிகண்டன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின்போது, மாநிலப் பொதுச் செயலா் டி.தனசேகரன் கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை தலைமைச் செயலகம் முன் வருகிற பிப்.11-ஆம் தேதி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 150 போ் பங்கேற்கின்றனா் என்றாா்.