அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
நோயாளியிடம் ரூ.200 லஞ்சம்: செவிலியா் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் ரூ.200 லஞ்சம் பெற்ற செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் காயத்துக்கு மருந்து கட்டுவதற்கு வந்த நோயாளி ஒருவரிடம் செவிலியா் ரூ.200 லஞ்சம் பெறும் விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானது. சம்பந்தப்பட்ட செவிலியா் பணம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள் பலரும் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிலையில், விடியோவில் பணம் வங்கிய செவிலியா் குறித்து மருத்துவமனை நிா்வாகம் விசாரணை நடத்தியது. அதில், செவிலியா் புஷ்பா ரூ.200 லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.