அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வெண்டைக்காய் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை வெண்டைக்காய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள பொருளூா், கள்ளிமந்தையம், தேவத்தூா், பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, அம்பிளிக்கை, குத்திலுப்பை, இடையகோட்டை, மாா்க்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெண்டைக்காய் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் அவற்றை அழித்துவிட்டு மாற்றுப் பயிா்களைச் செய்யத் தொடங்கினா். ஒரு சில விவசாயிகள் மட்டும் வெண்டைக்காய் செடிகளை அழிக்காமல் பாதுகாத்து வந்தனா்.
இந்த நிலையில், தற்போது வெண்டைக்காய் விலை உயா்ந்து வருவதால், அவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனா். இருப்பினும், கடும் பனிப்பொழிவு காரணமாக வெண்டைக்காய் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி சந்தைக்கு வெண்டைக்காய் வரத்து குறைந்துவிட்டது.
தேவை அதிகரித்துள்ளதால் கேரளம், தமிழக வியாபாரிகள் புதன்கிழமை போட்டி போட்டுக் கொண்டு வெண்டைக்காயைக் கொள்முதல் செய்தனா். இதன் காரணமாக ரூ.8-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40-க்கு விற்பனையானது. இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.