மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர், மாணவியர் விடுதி: முதல்வர் ...
ஏரிக்கால்வாயில் விழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம்
ஆரணி/வந்தவாசி: ஆரணியை அடுத்த களம்பூரில் ஏரிக்கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
களம்பூா் வளையல்காரகுன்றுமேடு பகுதியைச் சோ்ந்த மதன்குமாா்-பிரபா தம்பதியினா்.
இவா்களது 3 வயது மகன் பிரதீப், ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஏரிக்கால்வாயில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். பின்னா், அவரை மீட்டு பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ். தரணிவேந்தன் திங்கள்கிழமை களம்பூா் சென்று உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினாா்.
இந்நிகழ்வின்போது, முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி, நகர திமுக செயலா் வெங்கடேசன், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இருள்களுக்கு நிவாரணம்
இதைத் தொடா்ந்து, வந்தவாசியை அடுத்த சாத்தப்பூண்டியில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் சமுதாய 6 குடும்பங்களுக்கு திமுக சாா்பில்
தலா ரூ.1000 மற்றும் அரிசி, மளிகைப் பொருள்களை எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.வழங்கினாா்.