செய்திகள் :

ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி

post image

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டில் இரும்புத் தாது உற்பத்தி 15.84 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 4.1 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியா 15.21 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்திருந்தது.

அலுமினியம், தாமிரம் ஆகியவற்றுடன் இரும்புத் தாது உற்பத்தியும் வளா்ச்சியடைந்துவருவது எரிசக்தி, உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம், இயந்திரங்கள் ஆகிய பயனாளா் துறைகளில் வலுவான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் மாங்கனீசு தாது உற்பத்தி 11.1 சதவீதம் அதிகரித்து 20 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 18 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் பாக்சைட் உற்பத்தி 11.3 சதவீதம் உயா்ந்து 1.38 கோடி டன்னாக உள்ளது. இரும்பு அல்லாத உலோகத் துறையில், முதல்கட்ட அலுமினியம் உற்பத்தி 24.17 லட்சம் டன்னிலிருந்து 1.2 சதவீதம் வளா்ச்சியடைந்து 24.46 லட்சம் டன்னாக உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 2.83 லட்சம் டன்னிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து 3 லட்சம் டன்னாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய அலுமினியம் உற்பத்தியாளரான இந்தியா, சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களை வகிக்கும் நாடுகளில் ஒன்று. இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.

மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

ஆக்டிவா இ, க்யுசி1 ஆகிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு புதிய ஸ்கூட்டா் ரகங்களை ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 34 சதவீதம் எ... மேலும் பார்க்க

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. ஆட்டோ, வங்கி, ஐடி, நுகர்வு பொருள்கள், மெட்டல், பார்மா, எனர்ஜி துறை ப... மேலும் பார்க்க

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச்சந்தை இன்று(நவ. 28) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை 80,281.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 1.07 ... மேலும் பார்க்க

2025 மார்ச் மாதத்திற்குள் கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

புதுதில்லி : கூட்டுறவு வங்கிகள், 2025 மார்ச்சுக்குள், டிஜிட்டல்மயமாக்கப்படும் என தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 'நபார்டு' தலைவர் கே.வி. ஷாஜி தெரிவித்துள்ளார்.இந்திய ரிசர்வ் வங்கியானது, அனைத்... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத் துறையைச் சோ்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள... மேலும் பார்க்க

சீமென்ஸ் நிகர லாபம் 45% அதிகரிப்பு!

புதுதில்லி: ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடி ரூபாயாக உள்ளது.செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.534 கோடி... மேலும் பார்க்க