சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!
ஐசிசி தொடரில் அதிக சிக்ஸர்..! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித்!
ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஐசிசி தொடர்களில் ஒரு அணியை 4 முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைத்தார். அதுமட்டுமின்றி, ரோஹித் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் சிக்ஸர் அடித்தபோது ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். ரோஹித் சர்மா 65 சிக்ஸர் விளாசி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் (64 சிக்ஸர்கள்) உள்ளார்.
ரோஹித் சர்மா ஏற்கனவே கெயிலின் 331 சிக்ஸர்களின் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 338 சிக்ஸர்களுடன் இந்த சாதனையைப் படைத்துள்ளார். தற்போது அவர் 351 சிக்ஸர்களுடன் ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக உள்ளார்.
ஐசிசி ஓடிஐ-களில் அதிக சிக்ஸர் விளாசியவர்கள்:
ரோஹித் சர்மா -65 சிக்ஸர்கள்
கிறிஸ் கெய்ல்-64 சிக்ஸர்கள்
க்ளென் மேக்ஸ்வெல் -49 சிக்ஸர்கள்
டேவிட் மில்லர் -45 சிக்ஸர்கள்
டேவிட் வார்னர் -42 சிக்ஸர்கள்
சௌரவ் கங்குலி -42 சிக்ஸர்கள்