செய்திகள் :

திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

post image

திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்? என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளக்கம் அளித்துள்ளார்.

துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய வெற்றிபெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளார். 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 5,800 ரன்களைக் குவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுபற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், “இது ஒரு நீண்ட பயணம். நான் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறேன். இந்த அற்புதமான பயணத்தில் பல நினைவுகள் இருக்கின்றன. பல அற்புதமான சக வீரர்களுடன் 2 உலகக்கோப்பைகளை வென்றது அருமையாக இருந்தது.

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அணியில் பல இளம் வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அதனால், ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பங்களிப்பை கொடுக்க நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐசிசி தொடரில் அதிக சிக்ஸர்..! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித்!

2010 ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், 2015 ஆம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையிலும், 2023 ஆம் ஆண்டு பாட் கம்மின்ஸ் தலைமையிலும் 2 உலகக்கோப்பைகளை வென்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் மைக்கேல் கிளார்க் ஓய்வுக்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெற்ற ஸ்மித் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் ஆட்டத்தில், பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி பின்னர் தனது தவறை ஒப்புக் கொண்டார்.

அதற்காக இவருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், பல விமர்சனங்களுக்கு ஆளான ஸ்மித் தடைக் காலம் முடிந்த பிறகு தற்போது அணியில் இடம்பிடித்து விளையாடி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் பார்க்க

2-வது அரையிறுதி: டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் முன்னேற்றம்!

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்... மேலும் பார்க்க

சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்! -விராட் கோலி

சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஐசிசி தொடரில் அதிக சிக்ஸர்..! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித்!

ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது... மேலும் பார்க்க