தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை -பாடகி கல்பனா விளக்கம்
ஹைதராபாத் : தூக்கம் சரியாக வராததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்துள்ளாா்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்ாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்போா் சங்கத்தினா் அளித்த தகவலின்பேரில் கல்பனாவின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அவா் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினா்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி தொடா்பாக காவல் துறையினா் கல்பனாவிடம் விசாரித்தனா். அப்போது, ‘சரியாக தூக்கம் வராத காரணத்தால் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை’ என்று கல்பனா தெரிவித்தாா்.
எனினும், கல்பனாவுக்கு மகளுடன் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.