செய்திகள் :

``ஐந்தே மாதத்தில்... எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்துவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதுதான். ஆனால், இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வியான யார் அந்த சார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தே மாதத்தில்...

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், ``சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' - கொதித்த ராமதாஸ் உடைந்த PMK? Anbumani|Imperfect Show 29.5.2025

* `எல்லாம் என் தவறு' - அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்! * இளைஞரணி பதவியிலிருந்து விலகிய முகுந்தன்! * அன்புமணி பற்றி மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்! - பிரேமலதா* மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆல... மேலும் பார்க்க

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' - சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற்றம்; பின்னணி என்ன?

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்குத் தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்தி... மேலும் பார்க்க

சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் - நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண... மேலும் பார்க்க

'அன்றே செத்து விட்டேன்' - அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த '10' குற்றச்சாட்டுகள் என்னென்ன?

இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அன்புமணியை நோக்கி ரா... மேலும் பார்க்க