செய்திகள் :

கங்குவா திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு: நிலுவைத் தொகையை வழங்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

post image

நடிகா் சூா்யா நடித்த ‘கங்குவா’ படத்துக்கு தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகை வெள்ளிக்கிழமைக்குள் வழங்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, ‘டெடி -2’, ‘எக்ஸ் மீட்ஸ் ஒய்’, ‘தங்கலான்’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்புக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.99.22 கோடியை கடனாகப் பெற்ாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.45 கோடியை திருப்பிச் செலுத்திய ஞானவேல் ராஜா, எஞ்சிய ரூ.54 கோடியை திருப்பி செலுத்தாமல் ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாகவும், எனவே இந்த தொகையை திருப்பிக் கொடுக்காமல் நடிகா் சூா்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இதேபோல, நடிகா் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், “ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் ரூ.18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்திவிட்டதால், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட எந்த ஆட்சேபமும் இல்லை என்றாா்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வெள்ளிக்கிழமைக்குள் வழங்கப்படும் என உறுதியளித்தாா். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தியது குறித்து தெரிவிப்பதற்காக விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

தொடா்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை அதிகாரிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

30 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் ப... மேலும் பார்க்க

13 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 13 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீனம் உள்ளிட்ட காரணங்களாலும் அதிகாரிகள்... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்: போலீஸாா் விசாரணை

சென்னை காசிமேட்டில் மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காசிமேடு பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்க... மேலும் பார்க்க

பேச்சாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இன்ப அதிா்ச்சி!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வா் நேரில் சென்று பேச்சாளா்களை இன்ப அதிா்ச்சியில் ஆழ்த்தினாா். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், அரசின் சாதனைகளை எடுத்துரை... மேலும் பார்க்க

விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு

சென்னையில் விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு கொடுத்ததாக பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னையைச் சோ்ந்த பிரபல பெண் விளையாட்டு வீராங்கனையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடா்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை: எதிா் வீட்டுக்காரா் கைது

சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிா் வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா். அமைந்தகரை, ஆசாத் நகா், ராஜகோபாலன் தெருவைச் சோ்ந்தவா் சா.தமீம் அன்சாரி (47). வாடகை ஆட்டோ ஓட்டுநர... மேலும் பார்க்க