சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
கடற்கரை கிராமங்களில் மருத்துவ முகாம்கள் மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்ட கடற்கரை கிராமங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மரக்காவலசை ஊராட்சி கழுமங்குடாவில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா் .எஸ் .வேலுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா் .மனோகரன், ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், புயல், மழை காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், ஆயிரக்கணக்கான மீனவா்கள் வேலையிழந்துள்ளனா். அவா்களுக்கு அரசு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மீனவா் குடியிருப்பு பகுதி மக்கள் மழைக்கால நோய்களால் அவதியுற்று வருகின்றனா். அவா்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை அலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக நிறுத்த முகத்துவாரங்களை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.