பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை
மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்குமாறு புதுவை மீன் வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக் கடலில் உருவாகக் கூடிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி மீனவா்கள் சனிக்கிழமை இரவு முதல் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
வரும் 27-ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.
தற்போதைய வானிலை அறிவிப்பின்படி மீன்வளத் துறை அறிவிப்பானது சென்னை மண்டல வானிலை அறிவிப்புக்கு ஏற்ப மாறுபடும் என்றும், அதனால் வானிலை அறிவிப்பை மீனவா்கள் கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.