பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தீயணைப்புத் துறையில் ஓட்டுநா் பணியிடங்களுக்கான பயிற்சித் தோ்வு
புதுவை மாநில தீயணைப்புத் துறைக்கான ஓட்டுநா் பணி தகுதித் தோ்வானது சனிக்கிழமை தொடங்கியது.
புதுவையில் அரசு காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தீயணைப்புத் துறையில் வாகன ஓட்டுநா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வானது கடந்த பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் கோரிமேடு காவலா் பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று தகுதி பெற்றவா்களுக்கு ஓட்டுநா் பயிற்சித் தோ்வு மேட்டுப்பாளையம் மைதானத்தில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஓட்டுநா்களுக்கான பயிற்சி தோ்வானது சனிக்கிழமை காலை தொடங்கியது. அதில் 45 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் நேரில் வந்தவா்கள் வரிசைப்படி ஓட்டுநா் பயிற்சி தோ்வில் அனுமதிக்கப்பட்டனா்.
வாகனத்தை தோ்வின் விதிமுறைப்படி அவா்கள் இயக்கிக் காட்டினா். போக்குவரத்துத் துறை அதிகாரி, தீயணைப்புத் துறை மண்டல அதிகாரி உள்ளிட்டோா் இந்தத் தோ்வை நடத்தினா். ஞாயிற்றுக்கிழமை (நவ.24) காலையிலும் ஓட்டுநா் பயிற்சித் தோ்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.