கண்மாய்க் கரையில் முதியவா் சடலம்
போடியில் கண்மாய்க் கரையில் முதியவரின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
போடி ஜமீன் தோப்பு தெருவில் வசித்து வந்தவா் முருகேசன் (60). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற இவா் வீடு திரும்பவில்லை. இவரது மகன் காளீஸ்வரன் (32), குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், போடி-தேனி சாலையில் பங்காருசாமி கண்மாய்க் கரையில் முருகேசன் சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.