`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
கமுதியில் பயிா் பரப்பு மின்னணு கணக்கீடு
ராநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பயிா் பரப்பு மின்னணு கணக்கீட்டுப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் ஜே. ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், பயிா் பரப்பு மின்னணு கணக்கீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கமுதி வட்டாரம், அபிராமம், நகரத்தாா்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மைத் துறை அலுவலா்கள், வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் மூலம் மேற்கொண்டு வரும் மின்னணு பயிா் பரப்பு கணக்கீட்டுப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் ஜே. ஜெயகாந்தன் ஆய்வு செய்தாா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, திருவாடானை பகுதிகளில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளான பண்ணைக்குட்டைகள் அமைத்தல், ஊருணி தூா்வாருதல், கால்வாய்களை சீரமைத்தல், நீா்செறிவூட்டும் தண்டுகள் அமைத்தல் போன்ற நீா்வள மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கர மணியன் (மத்திய திட்டம்), வேளாண்மை துணை இயக்குநா் மோகன்தாஸ் (பொ), நீா்வடிப்பகுதித் திட்ட வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.ராஜலட்சுமி, கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ச. சிவராணி, உதவிப் பொறியாளா் செல்லமுத்து, வேளாண்மை அலுவலா் சந்தோஷ், வேளாண்மை உதவி அலுவலா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.